திருட்டு சம்பவம் என்பது இயல்பாகவே அனைத்து ஊர்களிலும் நடப்பது உண்டு. மேலும் அந்த வகையில் தற்போதெல்லாம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு சில காட்சிகளில் கதைக்காக திருடுவது, கொலை செய்வது போன்றவற்றை காட்சிகளாக வைத்துள்ளனர்.
ஆனால் அந்த காட்சிகளை பார்வையாளர்கள் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு திருடுவது கொலை செய்வது போன்றவற்றை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படமான லிங்கா திரைப்படத்தில் ரஜினி மற்றும் அவர் நண்பர்கள் பிரபல நகைக்கடை திருடுவதற்காக வந்துள்ளார்கள்.
ஆனால் அது தெரியாமல் அந்த கடையின் உரிமையாளரான கிரன் குமார் அந்த நகையை பற்றிய முழு விவரத்தையும் கூறுவார். அந்தப்படத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நகைக்கடை பிரபல லலிதா ஜுவல்லரி தான்.
அதாவது எப்படி இந்த திரைப்படத்தில் கொள்ளையடிக்கப்பட்டதோ அதுபோலவே உண்மையில் திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடையிலும் திருடு போனது.
தற்போது சமூகவலைத்தளங்களில் லிங்கா திரைப்படத்தில் சொன்னது போலவே உண்மையாகவே நடந்து விட்டது எனக் கூறி வருகின்றனர்.