ரஜினியுடன் நடித்துக் கொண்டிருக்கும் போதே படத்திலிருந்து தூக்கிய இயக்குனர்.. காரணம் தெரியாமலேயே புலம்பிக்கொண்டு சென்ற விஜயகாந்த்

rajini
rajini

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் யார் நம்பர் ஒன் நடிகர் என்பதை தெரிந்து கொள்ள நேருக்கு நேராக மோதுவது வழக்கம்.. ஆனால் இதை ஒரு பெரிய பகையாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் ஓடும் நடிகர்களும் இருகின்றனர் எடுத்துக்காட்டு ரஜினி, கமலை நாம் சொல்லலாம்..

ரஜினி, கமல் படங்கள் பல தடவை நேருக்கு நேர் மோதி இருந்தாலும்.. சினிமாவிலும் சரி, வெளி உலகத்திலும் சரி, நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். மேலும் இருவரும் இணைந்து பல படங்களில்  ஹீரோ, வில்லனாகவும் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போலவே தான் விஜயகாந்த், ரஜினியும் என்ன வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை..

மற்றபடி உதவி செய்து கொள்வது மற்றும் நல்ல நண்பர்களாக ஜொலித்தனர் இதோடு மட்டுமல்லாமல் ரஜினியின் பல்வேறு படங்களில் விஜயகாந்த் நடிக்க இருந்ததும் உண்மை தான் என சொல்லப்படுகிறது அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. 1978 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் உருவான “என் கேள்விக்கு பதில்” என்ற திரைப்படத்தில்..

சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக விஜயகாந்த் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஐந்து நாள் ஷூட்டிங் நடித்தார். ஆனால் அவரின் தமிழ் உச்சரிப்பு சரி இல்லை என்ற காரணத்தினால்  ரஜினி படத்திலிருந்து விலகினாராம்.. பிறகு கேப்டன் நடித்த அந்த கதாபாத்திரத்தில் விஜயகுமாரை நடிக்க வைத்துள்ளனர்.

படம் அப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்றது ரஜினி படத்திலிருந்து விஜயகாந்த் நீக்கியது அப்பொழுது ஒரு சாதாரணமான விஷயமாக இருந்தாலும் இப்பொழுது அது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் திரையுலகில் இரண்டு பேருமே மிகப்பெரிய ஜாம்பவான்கள் அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தால் அது இன்று வரையிலும் பேசப்பட்டு இருக்கும் என்பது தான் உண்மை