தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினி. இவர் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் அதே அளவிற்கு பல தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார் இருந்தாலும் இவருடைய இந்த சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தை யாராலும் பெற முடியவில்லை அந்த அளவிற்கு சினிமாவில் உயர்ந்து நிற்கிறார் நடிகர் ரஜினி.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சரியான படங்களை கொடுக்க முடியாமல் போனது. இந்த நிலையில் இவர் கடைசியாக நடித்த அண்ணாத்த படத்தையும் ரசிகர்கள் சீரியல் போல் இருக்கிறது என்று கூறி வந்தார்கள் இந்த நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த படத்தில் கன்னட முன்னணி நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அது மட்டும் இல்லாமல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரஜினி அவர்கள் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய பழைய நண்பரை சந்தித்துள்ளார்.
நடிகர் ரஜினியை சந்திரபாபு நாயிடு என்பவர் நீண்ட வருடங்கள் கழித்து சந்தித்து அவருக்கு சால்வை அணிந்து கௌரவப்படுத்தியுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இவர் நடிகர் ரஜினியின் பழைய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய நண்பரை சந்தித்து உரையாடல் நடத்தியதில் நான் முகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
It was a pleasure to meet and interact with my dear friend 'Thalaivar' @rajinikanth today! pic.twitter.com/b8j1BxICEF
— N Chandrababu Naidu (@ncbn) January 9, 2023