ரஜினி, கமல், விஜயகாந்திற்கு வில்லனாக நடித்த ஆனந்தராஜின் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

ananthraj-5

சினிமாவைப் பொருத்தவரை ஒரு காலகட்டத்தில் ஹீரோவுக்கு தான் அதிக மவுசு  இருந்தது ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் ஹீரோவை விட வில்லன்களுக்கு மவுசு அதிகமாக கூடிக்கொண்டே போகிறது அதற்கு காரணம் ஹீரோ பலரும் வில்லனாக நடித்து அசத்துவது தான். ஆனால் ஒரு காலகட்டத்தில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தவர்தான் ஆனந்தராஜ்.

இவர் ஹீரோவுக்கு நிகராக ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக விளங்கி வரும் ரஜினி கமல் விஜயகாந்த் என பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்து பிரபலம் அடைந்தவர் இவர் தமிழ், தெலுங்கு என இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் ஹீரோவுக்கு நிகராக பேசப்படும்.

இந்த நிலையில் தற்போது ஆனந்தராஜ் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில்  குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஒரு காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களும் தனக்கு வில்லனாக ஆனந்தராஜ் அவர்களை போடுங்கள் என பலரும் கூறிய காலம் உண்டு. ஆனால் தற்பொழுது இவர் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதால்  ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலை தான்.

இவரின் வில்லத்தனம் சினிமாவில் வெறித்தனமாக இருக்கும் ஆனால் தற்பொழுது உள்ள திரைப்படங்களில் காமெடி கலந்த கதாபாத்திரமாக நடித்து வருகிறார் ஆனந்தராஜ் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேல் சினிமாவில் பணியாற்றி வருகிறார் ஆனந்தராஜ் சினிமாவில் கொடூர வில்லனாக நடித்தாலும் வெளி உலகிற்கு இவர் காமெடியாக தான் திகழ்வார்.

Anand-Raj-Family
Anand-Raj-Family

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வரும் ஆனந்தராஜ் குடும்ப பற்றி பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வந்தது இந்த நிலையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள் தற்பொழுது இவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் ஆனந்தராஜ் அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா என கமண்ட் செய்து வருகிறார்கள்.

Anand-Raj-Family