Vijayakanth : திரை உலகை பொருத்தவரை போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும் எம்ஜிஆர், சிவாஜி தொடர்ந்து ரஜினி, கமல்.. இப்போ அஜித், விஜய் போட்டி போட்டு வருகின்றனர் அந்த வகையில் 80 -களில் முதல் இடத்தில் ரஜினி இரண்டாவது இடத்தில் கமல் இருந்தாலும் மூன்றாவது இடத்திற்கு பெரிய போட்டி நிலவியது.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் ரஜினி, கமல் ஒரு பக்கம் வெற்றிகளை கொடுத்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க மூன்றாவது இடத்தை பிடிக்க மைக் மோகன், விஜயகாந்த் தொடர்ந்து ஆக்சன் மற்றும் காதல் கலந்த படங்களில் நடித்து வந்தனர் மறுபக்கம் அந்த இடத்திற்கு பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்றவர்களும் பிடிக்க ஆசைப்பட்டு தொடர்ந்து போட்டி போட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் மணிரத்தினம் இயக்கிய மௌன ராகம் படத்தில் மோகன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் படத்தில் ரேவதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் அடித்தது படமும் நன்றாக ஓடியது.
இந்த படத்திற்கு பிறகு மைக் மோகனின் வளர்ச்சி அதிகரித்து மூன்றாவது இடத்திற்கு பேசப்பட்டார் ஆனால் அதன் பிறகு மைக் மோகன் நடித்த படங்கள் சுமாராக ஓடியதால் அவர் சரிவை சந்தித்தார். இந்த மாதிரியான நேரத்தில் விஜயகாந்த் சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு அதிக படங்களில் நடித்தார்.
அதில் பெரும்பாலான படங்கள் வெற்றியை பெற்றது 90 கால கட்டத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை விஜயகாந்த் தக்க வைத்துக் கொண்டார். விஜயகாந்த் அந்த இடத்தை பிரித்த பிறகு வேறு யாரும் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது தான் நிஜமான உண்மை..