Rajini and Kamal : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் வசனகர்த்தா ஆகவும் வலம் வந்தவர் பஞ்சு அருணாச்சலம். இவருக்கு ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து ஒரு வாக்குறுதியை கொடுத்தார்கள் அதாவது இருவரும் இணைந்து ஒரே திரைப்படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார்கள் ஆனால் கடைசி நேரத்தில் இருவரும் இணைந்து ஒரே திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால் இருவரும் மிகப்பெரிய உதவியை பஞ்ச அருணாச்சலத்திற்கு செய்துள்ளார்கள் அதைப்பற்றி இங்கு விரிவாக காணலாம்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வசனகர்த்தாகவும் வளம் வந்தவர் பஞ்ச அருணாச்சலம். இவர் முன்னணி நடிகராக வலம் வந்த கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார், அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பஞ்சு அருணாச்சலத்திற்கு ஒரு ஐடியா வந்தது இருவரையும் இணைத்து ஒரே திரைப்படத்தை இயக்க முடிவு செய்தார் அந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
அது மட்டும் இல்லாமல் இருவரையும் இணைத்து எடுக்கும் திரைப்படத்தை எஸ்.பி முத்துராமன் இயக்க வேண்டும் என முடிவு செய்தார் பஞ்சு அருணாச்சலம் அதனால் கமல் மற்றும் ரஜினி இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்தார் அப்பொழுது இருவரையும் இணைத்து படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன் அது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என கேட்டுள்ளார் இருவரும் இணைந்து படம் நடித்து தருகிறோம் என வாக்குறுதியும் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் தனித்தனியாக படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது அந்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை தழுவியது ரஜினிக்கு பைரவி, பிரியா ஆகிய திரைப்படங்களும் கமலுக்கு குரு ஆகிய திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது அது மட்டும் இல்லாமல் இருவரும் இணைந்து நடித்த அலாவுதீன் அற்புத விளக்கு திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த ரஜினி மற்றும் கமல் இருவரிடமும் பஞ்சு அருணாச்சலம் கதையை ரெடி செய்து விட்டேன் என நேரில் பார்த்து கூறியுள்ளார் அப்பொழுது இருவரும் இணைந்து நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். அதனால் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பே கிடையாது என கூறியுள்ளார் அதனால் பஞ்ச அருணாச்சலம் அதிர்ச்சடைந்துள்ளார். உடனே பஞ்ச அருணாச்சலம் பல மாதங்கள் கஷ்டப்பட்டு இந்த கதையை உருவாக்கினேன் என கூறியுள்ளார்.
உடனே ரஜினி மற்றும் கமல் இருவரும் நாங்கள் இணைந்து உங்கள் படத்தில் நடிக்க மாட்டோம் என்று தான் கூறினோம். ஆனால் தனித்தனியாக நடிக்க மாட்டோம் என்று கூறவில்லையே உங்களுக்காக தனித்தனியாக படங்களில் நடித்து தருகிறோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். அதனால் பஞ்சு அருணாச்சலத்திற்கு இரண்டு மடங்கு சந்தோஷம் ஏனென்றால் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்து தருகிறோம் என இருவரும் கூறுகிறார்களே. அந்த வகையில் கமலுக்கு ஒரு கதையையும் ரஜினிக்கு ஒரு கதையையும் பஞ்ச அருணாச்சலம் தயார் செய்தார் இந்த திரைப்படத்தை எஸ்.பி முத்துராமனை வைத்து தான் இயக்க வேண்டும் என அவரை நேரில் சந்தித்தார் அப்பொழுது ஒரே நேரத்தில் எப்படி இரண்டு படத்தையும் என்னால் இயக்க முடியும் என கூறி என்னுடைய உதவியாளர் ஒரு திரைப்படத்தை இயக்குவார் என வாக்குறுதி கொடுத்தார்.
அப்படிதான் கமலஹாசனின் கல்யாணராமன் ரஜினிகாந்த் நடித்த ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம் உருவானது எஸ்பி முத்துராமன் உதவியாளர் ஜி என் ரங்கநாதன் இயக்கத்தில் கல்யாணராமன் கமலஹாசன் இரட்டைவேடத்தில் நடித்த திரைப்படம் உருவானது இந்த திரைப்படத்தில் விகே ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் என பலர் நடித்திருந்தார்கள்.
அதேபோல் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம் உருவானது இந்த திரைப்படத்தை ஜெயலட்சுமி, சோ, சங்கீதா, ஜெயா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் இரண்டு திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதேபோல் இரண்டு திரைப்படமும் இரண்டே மாத இடைவெளியில் வெளியானது 1979 ஆம் ஆண்டு ஜூலை ஆறாம் தேதி கல்யாணராமன் திரைப்படமும் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படமும் வெளியானது.
ரஜினிகாந்த் கமல் ஆகிய இருவரும் இணைந்து நடித்து தருகிறோம் என்று கொடுத்த வாக்குறுதி நிறைவேற விட்டாலும் இருவரும் தனித்தனியாக ஒரு திரைப்படம் நடித்துக் கொடுத்து பஞ்சு அருணாச்சலத்திற்கு மிகப்பெரிய உதவியை செய்திருந்தார்கள் மேலும் இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.