ரஜினி மற்றும் கமல் நடிப்பில் 1978-ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘அவள் அப்படித்தான்’ இந்த திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, குட்டி பத்மினி, சிவச்சந்திரன் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படத்தை இயக்குனர் ருத்ரய்யா இயக்கியிருந்தார் படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் அந்த கலத்தில் மிகவும் பிரபலம், மேலும் அப்பொழுது இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது, இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 42 வருடங்கள் ஆகிவிட்டது, இப்பொழுது இந்த காலத்திற்கு ஏற்றவாறு படத்தை ரீமேக் செய்ய இருக்கிறாராம் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்.
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் பானா காத்தாடி என்ற திரைப்படத்தை இயக்கியவர், இவர் அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார், மேலும் ரஜினி கதாபாத்திரத்திற்கு சிம்புவையும், கமலஹாசன் கதாபாத்திரத்திற்கு துல்கர் சல்மான் அவர்களையும் வைத்து இயக்க இருக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் நடிகை சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, இதுபற்றி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறுகையில் ‘அவள் அப்படித்தான்’ என்ற திரைப்படத்தை இந்த காலத்திற்கு ஏற்றவாறு கதையை ரெடி செய்து இயக்க விரும்புவதாகவும் இந்த திரைப்படத்திற்கு என்னுடைய பேவரிட் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இருந்தாலும், படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபகாலமாக பழைய படங்களை ரீமிக்ஸ் செய்து செய்து வருகிறார்கள் ஆனால் இதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ஹிட்ஸ் அடித்துவருகிறது மற்ற திரைப்படங்கள் வழக்கம்போல் ஊத்திக் கொள்கின்றன. அந்த வகையில் பழைய கதையை இந்த காலத்திற்கு ஏற்றவாறு மாற்றுவதால் சொதப்பி விடுவார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.