லோகேஷ் கனகராஜ் அவர்கள் தற்போது தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை எடுத்து வருகிறார். படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் குட்டிக்காக வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் ரசிகர்கள் மேலும் அவர்கள் கூறியது இப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நம்மை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ரஜினியும் கமலும் தற்போது புதிய படத்தில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் சினிமா துறையில் பெரும் சாதனைகளை படைத்து இருந்தாலும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது வரலாற்று சிறப்பு கூறியதாக இருக்கும் என ரசிகர் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சுமார் 35 வருடங்கள் கழித்து ஒன்றாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தற்போது மாஸ்டர் இயக்கி வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து அவர் ரஜினி மற்றும் கமலை வைத்து படம் தொடங்குவார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் இதற்கு முன்பு கைதி என்ற ஒரு மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கியவர் என்பது குறிபிடத்தக்கது.
சமீபத்தில் ரஜினி அவர்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அவர்களை சந்தித்தார் படம் அருமையாக வந்துள்ளது எனவும் இதேபோல் கதை இருந்தால் தான் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமிபத்தில் கமல் அவர்கள் தனது குருவான பாலச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பேசியது ராஜ்கமலின் அடுத்த படம் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இந்தநிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்களை கமலை சந்தித்து வெகு நேரம் பேசி உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. ரஜினி மற்றும் கமல் இவர்கள் இருவரும் லோகேஷ் கனகராஜீடம் கதை இருந்தால் நடிக்க தயார் என்பது போல கூறியுள்ளனர். இந்த நிலையில் படத்தின் பூஜை வருகிற மார்ச் மாதம் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இவரது ரசிகர்கள் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை ஏனென்றால் இவர்கள் இருவரும் அரசியல் ரீதியாக இணைய உள்ள நிலையில் இவர்கள் அதற்கு முன்பு படத்தில் இணைந்து பணியாற்றினால் சிறப்பாக இருக்குமென ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.