பல்வேறு மேடை நாடகங்களை இயக்கி அதன் பிறகு சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் கே பாலச்சந்தர் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழ் சினிமாவில் புன்னகை மன்னன், அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற மெகாஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
பொதுவாக பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் சமூகரீதியாக இருப்பது மட்டுமின்றி மிகவும் எதார்த்தமாக இருக்கும் அந்த வகையில் பலர் பேசும் பொருளாக இல்லாமல் அரசியலும் பேசியிருப்பார் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி கமல் போன்ற நடிகர்களை கூட பாலச்சந்தர் அவர்கள் தான் அறிமுகம் செய்தார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர்களில் ரஜினியை விட அதிக திரைப்படங்களில் பாலச்சந்தர் உடன் பணியாற்றியது கமலஹாசன் தான். அந்த வகையில் கே பாலச்சந்தர் அவர்களை கமல் மற்றும் ரஜினி ஆகியவர்கள் தங்களுடைய குரு என கூறுவார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் உயரத்திற்கு சென்றபிறகு பாலச்சந்தர் திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அந்தவகையில் வேணுமென்றால் அவர் திரைப்படத்தை தயாரிக்கட்டும் முத்துராமன் ஐயாவை திரைப்படத்தை இயக்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்களாம்.
இதனால் இயக்குனர் பாலச்சந்தர் எஸ்பி முத்துராமன் திரைப்படங்களுக்கு கதை எழுதாமல் தயாரிப்பில் மட்டும் பணியாற்றி வந்தார். இவ்வாறு ரஜினி மற்றும் கமல் செய்தது நியாயமா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ஏனெனில் அன்று பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இவர்கள் என்று இந்த அளவிற்கு பிரபலம் ஆகி இருப்பார்களா என்றால் அது சந்தேகம்தான்.