லோகேஷ் படத்தில் கமல் ரஜினி.? அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

lokesh movie rajini kamal

Rajini Kamal in Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் இவர் இயக்கத்தில் வெளியாக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது தளபதி விஜய்-யைவைத்து லியோ  என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக  இருக்கிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார். அந்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். லியோ படம் குறித்து அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது.  அப்பொழுது படத்தில் சென்சார் கட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ் அவர்கள் சில ஆக்ஷன் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. அது அனைவரும் பார்க்கும் படியான காட்சிகள் இல்லை என்பதால் சென்சார் குழு நீக்கிவிட்டதாக கூறியிருந்தார்.

rajini kamal
rajini kamal

லோகேஷ் படத்தில் கமல் ரஜினி.? அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

அதேபோல் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் ரஜினியுடன் படம்  பண்ணுவது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அப்பொழுது சூப்பர் ஸ்டாருடன் திரைப்படம் அடுத்த தொடங்க இருக்கிறது எனக் கூறியிருந்தார், அது மட்டும் இல்லாமல் மூன்று வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் இணைய வேண்டியது கமல் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படம் பண்ண வேண்டியது ஆனால் அந்த திரைப்படம் அப்படியே நிறுத்தப்பட்டது எனக் கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ் அந்த சமயத்தில் கொரோனா காலகட்டமாக இருந்தது அப்பொழுது கமல் தயாரிப்பில் ரஜினி சார் ஹீரோவாக நடிக்க இருந்தார். அதன் பிறகு இப்பொழுது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படத்தை இயக்க இருக்கிறேன்  இது குறித்து கமல் அவர்களிடம் போனில் பேசினேன் அவரும் சந்தோஷமாக ஃபீல் பண்ணினார் என கூறினார்.

லியோ சூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ்க்கு போன் போட்ட ரஜினி.! மொத்த அசிஸ்டன்ட் டைரக்டர் இருக்கும்பொழுது என்ன சொன்னார் தெரியுமா.? கொளுத்துங்கடா வெடிய…

அதன் பிறகு நேரிலும் கமலை சந்தித்து பேசினேன் எனவும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கூறியுள்ளார்.