ஒரு நடிகர் திரையுலகில் நீண்ட வருடங்கள் பயணிக்க தனது கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும் அதை தற்போது இருக்கும் இளம் நடிகர்கள் ஆரம்பத்திலேயே உணருகிறார்கள் ஏனென்றால் ஒரு நடிகரை ரசிகர்கள் உச்சியில் வைத்து அழகு பார்க்க அவர் தொடர் ஹிட் படங்களை கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் 40 வருடங்களாக ரசிகனின் மனதில் நீங்கா இடம் இடத்தை பிடித்தவர்கள் ரஜினி கமல் தான் இவர்கள் இருவரும் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.இதனால் இன்று வரையும் தமிழ் உச்சியில் இருகின்றனர்.
சமீபகாலமாக கமல் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை மாறாக அரசியலில் குதித்து தற்பொழுது சட்டமன்ற வேட்பாளராக இறங்கியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் சமிபத்தில் தான் இந்தியன் 2 திரைப்படத்தில் ஷங்கருடன் மீண்டும் கைகோர்த்தார். ஆனால் சூட்டிங் ஆரம்பித்த நாட்களில் இருந்து கடைசி வரைக்கும் பல இன்னல்களையும் சறுக்கல்களையும் சந்தித்து.
இனால் தயாரிப்பு நிறுவனம் படத்தை ட்ராப் செய்து மேலும் ஷங்கரும் தற்போது வேறு ஒரு படத்தை இயக்க முன் எடுத்ததால் கமலும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் தற்போது நடிக்க ஆயத்தமாகி உள்ளனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினியும் தொடர்ந்து வருடத்திற்க்கு ஒரு படங்களை கொடுத்து வந்த நிலையில் இவர் அரசியலில் களம் காண்கிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
அவரது உடல் நிலை சரிபட்டு வரத்தால் மீண்டும் தனது பிரதான தொழிலான சினிமாவையே நம்பி உள்ளார் இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்திற்காக மீண்டும் ரெடியாகி நடித்து வருகிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் தயாரித்து வருகிறது.
அண்ணாத்த படம் வருகின்ற 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது அதுபோல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படமும் தீபாவளியை குறி வைத்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் எரிக்கின்றனர் அதற்குக் காரணம் 16 வருடங்களுக்கு பிறகு ரஜினியும் கமலும் நேருக்கு நேர் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என கூறப்படுகிறது.
ரஜினி நடிப்பில் சந்திரமுகி கமல் நடிப்பில் மும்பை எக்ஸ்பிரஸ் இதற்கு முன்பு வெளியானது இதில் ரஜினியின் சந்திரமுகி படம் மாபெரும் ஹிட்டடித்தது கமலின் படம் படுதோல்வியை சந்தித்தது அதனால் இந்த தடவை ரஜினியை ஓரம் கட்டுவாரா கமல் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.