ரஜினி, கமலை விட இவரது நடிப்பு தான் சிறப்பாக இருக்கும் – திடீரென குண்டைத் தூக்கிப் போடும் தேவயானியின் கணவர்.!

rajini and kamal
rajini and kamal

80, 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ஓடி கொண்டிருப்பவர் ரஜினி, கமல் இவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு நிகராக 80 90 காலகட்டங்களில் விஜயகாந்த், முரளி, சரத்குமார், சத்யராஜ், கார்த்திக்  போன்ற பல பிரபலங்கள் நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன்  சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சரத்குமாரை பற்றி பேசி அசத்தியுள்ளார். சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களில் சரத்குமாரை போன்று இன்று வரையிலும் யாராலும் நடிக்க முடியாது.

அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிப்பாக இருக்காது அப்படியே வாழ்ந்திருப்பார் கமல், ரஜினி போன்றவரை எடுத்துக் கொண்டால் அவர்களை எல்லாம் நான் சொல்லவே மாட்டேன். ரஜினி நடித்தால் அதிகமாக நடிப்பார் கமல் வித்தியாசமான நடிப்பார் ஆனால் சரத்குமார் அந்த கதாபாத்திரமாகவே வாழ்வார் என கூறினார்

மேலும் காஞ்சனா படத்தை பார்த்தால் அந்த அளவிற்கு யாராலும் நடிக்கவே முடியாது. நாட்டாமை எடுத்துக்கொண்டால் நாட்டாமை ஆகவே வாழ்ந்திருப்பார் என கூறி சரத்குமார் நடிப்பை புகழ்ந்து தள்ளினார். இயக்குனர் ராஜகுமாரன் சொல்வதுபோல சினிமா உலகில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் பட் இப் அதையும் தாண்டி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்கள்

அவரது படங்கள் வெற்றியை ருசித்த உள்ளன. தற்போது கூட வயசானாலும் ஒருசில கதாபாத்திரங்களாக தனது உடலை வருத்திக்கொண்டு இப்பொழுதும் நடிப்பில் அசத்தியுள்ளார். நடிகர் சரத்குமார் கையில் தற்போது தளபதி 66, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன இதோடு மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து பல்வேறு படவாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்.