என்ன ஜெயிக்க எவன்டா இருக்கா. ரஜினியின் “ஜெயிலர்” உலகம் முழுவதும் அள்ளி வசூல் எவ்வளவு தெரியுமா.?

Jailer
Jailer

Jailer : சினிமா உலகில் ஒரு புது படம் வெளிவந்து புதிய சாதனை படைப்பது வழக்கம் அந்த வகையில்  தமிழில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 4௦௦௦ -த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆனது.

படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவ ராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், தமன்னா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மாரிமுத்து, மிர்னா மேனன், விநாயகன் என பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.

இதனால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது  இன்றுவரை ஹவுஸ் புள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது அதனால் ஜெயிலர் படத்தின் வசூலும் எந்த வகையிலும் குறை வைக்கவே இல்லை முதல் நாளே 91 கோடி வசூல் செய்து அசத்தியது அதனைத் தொடர்ந்து வசூலில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இதனால் சந்தோஷம் அடைந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 சீரிஸ் கார் ஒன்றை கொடுத்தார் அதேபோல இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு ஒரு கோடி மதிப்பிலான சொகுசு காரையும் கொடுத்தார். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் இதுவரை மட்டுமே 605 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறைய போவதில்லை என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயிலர் டீம் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம்