90 காலகட்டங்களில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை படைத்து இருந்தவர் இயக்குனர் விக்ரமன். இவரது முதல் படமான புது வசந்தம் படம் நான்கு ஆண் நபர்கள் மத்தியில் ஒரு பெண் நபர் எப்படி இருந்துக்கொண்டு இந்த வாழ்க்கையில் முன்னேற போகிறார்கள் என்பதை எடுத்துரைக்கும் நட்பை பற்றிய படமாக இது அமைந்தது. வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இதை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் வெற்றி/ தோல்வியைக் கொடுத்து வந்தாலும் ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டார் அதன்பின் இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கிச் சென்றது. அஜித், விஜய், விஜயகாந்த் போன்ற சூப்பர் டூப்பர் நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
அந்த படங்களில் பெரும்பாலும் ஹீரோவுக்கு முக்கியதத்துவம் உள்ள அதிக ரோல் இல்லை என்றாலும் அதில் அவரது எதார்த்தமான நடிப்பை பார்க்க முடிந்தது. அது இயக்குனர் விக்ரமனின் ஸ்டைல் அது போன்ற பல படங்களை இயக்கி வெற்றி பெற்று உள்ளார்.
இதை அறிந்த ஒரு சில நடிகர்கள் இவரது படத்தில் நடிக்கவில்லை. ஹீரோவுக்கு ரோல் கம்மியாக் இருப்பதோடு இவரது படத்தில் மிகப்பெரிய அளவில் சண்டை காட்சிகள் மற்றும் பிஞ்ச் டயலாக்கும் பெரிதும் இருக்காது. இதனால் இவரது படத்தைத் தவிர்த்து உள்ளனர்.
அதுவும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது படத்தில் சுத்தமாக நடிக்கவே இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட வெற்றியை பெற்ற பிறகு ரஜினி பெரும்பாலும் ஆக்சன் படங்களில் தான் நடித்தார். அந்த காரணத்தினால் விக்ரமுடன் அவர் இணைந்து பணியாற்ற இல்லை. விகரமன் திரைப்படங்களில் ரஜினி நடித்திருந்தால் ஸ்டைலை அல்லது சண்டைக் காட்சிகளையும் இருக்காது.
ஒரு வேலை ரஜினி இவர் படத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதும் கேள்விக்குறி தான் இதை உணர்ந்த ரஜினி பெரிதும் விக்ரமன் படங்களை உள்ளதாக கூறப்படுகிறது.