தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா எடுத்திருந்தார்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பாண்டியராஜ், சூரி, சதிஷ் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி இருந்தனர். படம் வெளிவந்ததும் சிறப்பான வசூலை அள்ளி இருந்தாலும் இடையில் ஏற்பட்ட மழையின் காரணமாக சற்று பின் தங்கியது.
எது எப்படியோ சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் 250 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது. திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்ற அண்ணாத்த திரைப்படம். ஒரு மாதம் கழித்து சன் நெஸ்ட் OTT தளத்திலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தியது.
கடந்த கடந்த பொங்கலை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் சன் டிவியில் வெளியாகி அசத்தியது. அண்ணாத்த படம் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தநன்றாக ஓடிய அசத்தியது சொல்லப்போனால் அண்ணாத்த திரைப்படம் இதுவரை மொத்தம் 17.37மில்லியன் பேர் பார்த்து கண்டுகளித்துள்ளனர்.
இதுவரை எந்த ஒரு படமும் நிகழ்த்தா சாதனையை ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் செய்து அசத்தி உள்ளது. இதனால் படக்குழு மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோர் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் மேலும் இச்செய்தியை தற்போது இணைய தள பக்கத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.