என்னுடைய காமெடிகள் அந்த படத்தில் சூப்பர் ஹிட் அடிக்க காரணம் ரஜினி தான் – பல வருட ரகசியத்தை உடைத்த வடிவேலு.!

rajini-and-vadivelu-
rajini-and-vadivelu-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சில பிரபலங்களுடன் இணையும் பொழுது அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றியை ருசிக்கும் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வடிவேலும் கைகோர்த்து பணியாற்றிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு பிடித்துப்போன படமாகவே அமைந்துள்ளன.

மேலும் அந்த படங்கள் ஹிட்டாகியுள்ளன அந்த வகையில் 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் திரைப்படம் சந்திரமுகி இந்த படத்தை பி வாசு இயக்கியிருந்தார் ரஜினியுடன் இந்த படத்தில் கைகோர்த்து நயன்தாரா, நாசர், ஜோதிகா,  மாளவிகா, வடிவேலு மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் பலர் கலந்துகொண்டு அசத்தினர்.

இந்த படம் வெளியாகி ரஜினி கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், திரில்லர் ஆகியவை சிறப்பாக இருந்தாலும் அதே சமயம் காமெடியும் மிகப் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகிறது இதில் வடிவேலு வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய அதில் ஒன்றாக மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு  என்கிற வசனங்கள்..

எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பார்க்கப்பட்டது இதுபோல் இந்த படத்தில் பல வசனங்கள் இடம் பெற்றிருந்தன இது படத்தின் வெற்றிக்கு ஒரு பங்கு வசித்தது. ரஜினி நினைத்திருந்தால் ஒரு சில காமெடி வசனங்கள் சரி இல்லை எனக கூறி அதை தூக்கி இருக்கலாம் ஆனால் இந்த படத்தில் ஒரு சில வசனங்கள் ஹீரோவை மிஞ்சும், ஹீரோவை சற்று தாழ்த்தி பேசும் அளவுக்கு இருந்தாலும்..

அது ரஜினிக்கு பிடித்து போனதால் இதை நாம் முயற்சித்துப் பார்க்கலாம் என கூறினாராம் அதனாலேயே சந்திரமுகி படத்தில் அனைத்து காமெடிகளும் வெற்றி பெற்றன என வடிவேலு கூறியிருந்தார். இந்த காமெடிகள் அனைத்தும் படத்தின் வெற்றி பாக்கபலமாக இருந்தது.