சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இரண்டு மூன்று ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனரான நெல்சன் உடன் கைகோர்த்து தனது 169 ஆவது திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் படத்திற்கான நடிகர் நடிகைகளை இயக்குனர் நெல்சன் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் ரஜினி உடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார் போன்ற பல நடிகர் நடிகைகளின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன ஆனால் எந்த ஒரு தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.
கூடிய விரைவில் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் எனது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஒரு படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளிவந்த லிங்கா படத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா செட்டி மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்த படம் அப்போது வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் லிங்கா படம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் பேசியது லிங்கா படத்தின் தோல்விக்கு காரணம் ரஜினி தான் முதலில் நான் ஒரு கிளைமாக்ஸ் காட்சியை எழுதி வைத்திருந்தேன், ஆனால் அவர் எடிட்டிங் காட்சியை பார்த்துவிட்டு கிளைமாக்ஸ் காட்சியை மாற்ற சொல்லி இருக்கிறார்.
ரஜினி சொன்னபோது எனக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர் சொன்னபடி எடுத்து படத்தை வெளியிட்டேன். ஆனால் அந்த லிங்கா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு திருப்தி இல்லாமலே இருந்தது என கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாய் வருகிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் லிங்கா படத்தின் தோல்விக்கு ரஜினி தான் காரணமா என விமர்சித்தும் வருகின்றனர்