Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் பல இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். நடிகர் அஜித் துணிவு பாடத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
இந்த நிலையில் அஜித், ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் 1992 ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு அமராவதி என நடித்து வந்த இவருக்கு காதல் கோட்டை, காதல் மன்னன், ஆசை போன்ற படங்கள் இவரை அடுத்த லெவலுக்கு தூக்கி விட்டது.
தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்தார் அஜித். இப்படி ஓடிக்கொண்டிருந்த அஜித்தை பார்த்த ரஜினி ஒரு தடவை அவரை அழைத்து உங்களுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் செட் ஆகும் எனவே என்னுடைய பில்லா படத்தில் நடியுங்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் உடனே விஷ்ணுவர்தன் உடன் கைகோர்த்து பில்லா செய்தார் அஜித் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு ஆக்சன் படங்களில் நடித்தார்.
அப்படி தான் தனது 50 வது படமான மங்காத்தா படமும் ஆக்சன் படமாக அமைந்தது இந்த படத்தில் அஜித் ஹீரோ கிடையாது வில்லன் தான் ஆனால் நடிக்க ஒப்புக்கொண்டார் காரணம் ரஜினி அன்று உங்களுக்கு நெகட்டிவ் ரோல் செட்டாகும் என்று கூறியதால் மங்காத்தா படத்தில் துணிந்து நெகட்டிவ் ரோலில் நடித்தார்.
படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களுக்கு இன்றும் ஒரு மறக்க முடியாத படமாக மங்காத்தா இருந்து வருகிறது. அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் ரசிகர்கள் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்க கேட்டுக் கொண்டு வருகின்றனர்.