தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோ என்ற பட்டத்தை தக்க வைத்துக்கொண்டு ஓடுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்கிறார். அந்த வகையில் தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் ரஜினி தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார்..
அதுவும் இந்த திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடிப்பதால் ரஜினியின் கேரக்டரை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இப்பொழுதே ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், விநாயகன், வசந்த ரவி, யோகி பாபு..
மற்றும் பல நடிகர் நடிகைகள் இந்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
1981 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராணுவ வீரன். இந்த படத்தில் நடிக்க ரஜினி கால்ஷீட் கொடுத்தாராம் ஆனால் படப்பிடிப்பின் பொழுது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாததால் 15 நாட்கள் அவரால் நடிக்க முடியவில்லை பிறகு நடித்தாராம்.
ஆனால் தயாரிப்பாளர் ரஜினிக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை மொத்தமாக கொடுத்திருக்கிறார். ரஜினியோ தான் நடிக்க வராத அந்த 15 நாட்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் தனது சம்பளத்தில் பாதியை கொடுத்துவிட்டுராம். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் ராஜன் வெளிப்படையாக கூறினார் மேலும் நடிகர் ரஜினியை புகழ்ந்து பேசி இருந்தார்.