தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கிறது இந்த படத்தினை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்து வருகிறது எனவே இந்த படத்தில் வெற்றி கண்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார் ரஜினி. ரசிகர்கள் அனைவரும் வயதான காரணத்தினால் ரஜினி படத்தின் சுறுசுறுப்பு இல்லை என கூறி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் ஜெய்லர் திரைப்படம் கண்டிப்பாக ஒரு நல்ல வெற்றினை பெரும் என ரஜினி நம்பிக்கையுடன் இருந்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், ஷிவ் ராஜ்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்தார்கள். முக்கியமாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார் இவர்கள் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் படம் முடித்தவுடன் லைக்கா நிறுவனத்தில் தயாரிப்பில் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாக இருக்கிறது இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து ஹீரோவாக நடிக்க இருக்கும் நிலையில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்த தகவல் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது இதனை அடுத்து மேலும் ஒரு லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் படத்தில் ரஜினி கமிட்டாகி உள்ளார்.
எனவே அந்த படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்குவரனை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு ஒரு இயக்குனரை ரஜினி தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் லால் சலாம் படத்தின் இயக்குனரான இவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடவடிக்கை சரி இல்லாத காரணத்தினால் ரஜினி கோபத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அதாவது லால் சலாம் படத்தின் கதையை ஐஸ்வர்யா இதுவரையிலும் யாரிடமும் சொல்லாமல் இருந்துவதா வருவதாகவும், மற்ற கலைஞரிடம் ஐஸ்வர்யா சற்று கட்டாயமாக நடந்து கொள்வதாகவும் பல பிரச்சனைகள் உருவாகி வருகிறதாம் எனவே இதன் காரணமாக இந்த படத்தில் இருந்து ஆடை வடிவமைப்பாளர் விலகிவிட்டார். மேலும் விஷ்ணு விஷாலுக்கும் ஐஸ்வர்யாவின் நடவடிக்கை பிடிக்காமல் இருந்து வருவதாகவும் அவரும் இந்த படத்தில் இருந்து விலகினால் ஆச்சரியப்படத் தேவையில்லை எனவும் கூறப்படு வருகிறது.