அஜித்துடன் மோதியாச்சி வாய்ப்பு கிடைத்தால் ரஜினி, கமலுடன் மோதிப் பார்க்க தயார் – முரட்டு ஹீரோ பேட்டி.!

kamal-rajini
kamal-rajini

இளம் வயதிலேயே சினிமா உலகில்  ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய அவர் அருண்விஜய். அப்பொழுது அவருடைய கரெக்டான வயது 17. அப்பொழுது எந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் வெற்றியை ருசிக்கும் என்பது அருண் விஜய்க்கு தெரியவில்லை .

அதனால் அவரது பெரும்பாலான படங்கள் ஆரம்பத்தில் தோல்வியை தழுவின ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதோடு அருண் விஜய் சினிமா உலகில் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார். ஒருவழியாக அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் சிக்ஸ்பேக் வைத்து மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

இதுவும் அஜித்துக்கு வில்லனாக மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த அருண் விஜய்க்கு பட வாய்ப்பு அதிகரித்தது முதலில் குற்றம் 24 என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார் அதன்பின் தடம் படம் இவருக்கு சினிமா கேரியரில் மிக திருப்புமுனை படமாக அமைந்தது.

தற்பொழுது அருண் விஜய் கையில் பாக்சர், பார்டர், அக்னி சிறகுகள், யானை போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன முதலாவதாக யானை படம் வெளிவர ரெடியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அருண்விஜய் சொல்லி உள்ளது நான் மீண்டும் நல்ல கதை கிடைத்தால் வில்லனாக நடிப்பேன்,

குறிப்பாக கமல் ரஜினி போன்றவர்களுடன் வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் அதுவும் எனது ஆசையும் கூட என தெரிவித்திருந்தார்.  ஏற்கனவே அருண் விஜய் அஜித், ராம்சரண் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.