கேஎஸ் ரவிக்குமார் கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் ரஜினி கமல் சரத்குமார் அஜித் போன்ற டாப் நடிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுத்து அசத்தியவர் கே எஸ் ரவிகுமார். இவரது திரைப்படங்கள் என்றாலே எப்போதும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும்.
இப்பொழுது கூட பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் அசத்தி வருகிறார். அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் தான் கூகுள் குட்டப்பா இந்த படத்தில் தமிழ் பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்து வருகின்றனர்.
இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் கேஎஸ் ரவிக்குமார் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் திட்டி உள்ளார். படையப்பா திரைப்படத்தில் ரஜினி சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் சிவாஜி மணிவண்ணன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் ஐயர்கள் அடி வாங்குவது போல காட்சிகள் உருவாக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கம்பெனி ஆட்களை ஐயர் வேஷம் போடச் சொல்லி உள்ளார் உடனே அவர்களும் வேஷம் போட்டு காட்சியை நடத்தினர் இதைப்பார்த்த சிவாஜி பக்கத்திலிருந்த ரஜினியிடம் சுத்த பொறுக்கி மாதிரி இருக்கானே என கூறி உள்ளார்.
ஐயர் வேடமிட்டு நடித்ததே கம்பெனி ஆட்கள் என்பது சிவாஜிக்கு தெரியாதாம் ஆனால் அவர் உண்மை என நினைத்துக்கொண்டு அப்படி பேசி உள்ளார் இதனை மேடையில் சொல்லி சிரித்தார் கேஎஸ் ரவிக்குமார்.