Rajini : தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான “ஜெயிலர்” திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஜெயிலர் படத்தின் 25 ஆவது நாளை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடிய வருகின்றனர். மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா திரையரங்கில் ஜெயிலர் 25வது நாளை விழாவில் ஜெயிலர் பட நடிகர் சரவணன் கலந்து கொண்டார். இவரைப் பார்த்த ரசிகர்கள் அங்கு கூட்டம் அதிகமாகினர்.
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சரவணனுக்கு சற்று மயக்கம் வந்தது. பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் சரவணன் பேசுகையில்.. நடிகர் ரஜினி ஒரு சித்தர் போல இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என அவருக்கு எல்லாம் தெரியும் ரஜினி காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிய ஒரே மாதத்தில் ஹீரோ ஆனவன் நான் ஜெயிலர் படம் ஹிட் அடிக்கும் என தெரிந்துதான் ரஜினி இமயமலைக்கு சென்றார்.
ரஜினியின் வாக்கு சித்தர் வாக்கு மாதிரி ரஜினி ஒரு கடவுள்தான் ரஜினி ஒரு சித்தர் அதை மதுரையில் உட்கார்ந்து கொண்டு சொல்கிறேன் ரஜினி சாரிடம் எல்லாமே எனக்கு பிடிக்கும் அவர் பிடிக்காத ஒன்று எதுவுமே இல்லை நடந்தால் பிடிக்கும் திரும்பினால் பிடிக்கும். ரஜினி சாரை பார்த்து இன்றுவரை நான் ரஜினி சார் மாதிரி சட்டை போட்டு வருகிறேன் ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்க உள்ளதாக குறித்த கேள்விக்கு ஆளுநர் பதவி எல்லாம் ஒன்றும் வேண்டாம்..
அவர் நன்றாக உடல் நலத்தோடு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தால் போதும் அவர் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேணாம் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு பாவம் வேண்டாம் விட்டுருங்க அவர அரசியலுக்கு அவர் வர வேண்டாம் நிம்மதியாய் இருக்கட்டும் என பேசினார்.