ரஜினி அழகான ஹீரோ கிடையாது.? அவரது படங்கள் வெற்றி பெறுவதற்கு இதுதான் காரணம் – லிவிங்ஸ்டன் பேச்சு.!

rajini-and-livingston
rajini-and-livingston

தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து பல வெற்றிகளை அள்ளி அசத்துபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு நல்ல வசூலை அள்ளியது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 169 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ரஜினி சினிமா ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை நடித்த படங்கள் மற்றும் அவரது கதாபாத்திரம் பற்றிய செய்திகள் வெளிவருவது வழக்கம்.

அதுபோல தற்போது ரஜினி குறித்து பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் சொன்னது : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த அளவுக்கு அழகான நடிகர் கிடையாது ரஜினியை விட அழகான ஹீரோக்கள் பலர் இருக்கின்றனர்.

ஆனால் ரஜினி இந்த உயரத்தில் இருக்க காரணம் அவர்களுடைய திறமை தான் என கூறினார். அமிதாப் பச்சனும் சரி ரஜினியும் சரி இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர்கள் ஆனால் அவர்கள் இருவருமே அழகான ஹீரோக்கள் கிடையாது அவர்கள் வெற்றியை ருசிக்க முக்கிய காரணம் அவருடைய கான்ஃபிடன்ஸ் தான் காரணம் என லிவிங்ஸ்டன் சொல்லி உள்ளார்.

சினிமா உலகில் ஒரு ஹீரோ வெற்றி பெற அழகு, வயது போன்றவற்றையெல்லாம் நினைத்து வருத்தப்பட தேவையில்லை கான்ஃபிடன்ஸ் இருந்தால் எந்த வயதில் வேண்டுமானாலும்  வெற்றி பெறலாம் என்பதை மறைமுகமாக லிவிங்ஸ்டன் சொல்லியுள்ளார். இதை இளம் நடிகர்கள் உணர்ந்து இருக்க வேண்டும் என்பதையே அவர் கூறுகிறார்