சினிமாவை பொறுத்தவரை தவறான பழக்கங்களால் பல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சினிமா வாழ்க்கை தலைவராக மாறியது என்றும் அதற்கு எடுத்துக்காட்டாக பலர் இருக்கிறார்கள் அப்படி ஒரு தவறான பழக்கத்தால் பிரபல நடிகை ஒருவருக்கு சினிமா வாழ்க்கை தலைகிழாக மாறி தற்போது புலம்பி வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவருடைய படத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை ஐஸ்வர்யா இவர் வேற யாரும் இல்லை பழம்பெரும் நடிகையான லட்சுமியின் மகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு உள்ளே வெளியே, எஜமான், ஹவுஸ்புல், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கு ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்த ஐஸ்வர்யா தற்போது குணசத்திர வேடங்களிலும் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்
சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு குடிப்பாக்கம் இருந்ததாகவும் எனக்கு எப்போ தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நான் குடித்து விடுவேன் என்றும் கூறியிருந்தார். இதனால்தான் என்னுடைய சினிமா வாழ்க்கை மாறியது என்றும் கூறியிருந்தார்.
தற்போது அந்த பழக்கத்திலிருந்து நான் விலகி விட்டேன் என்றும் கூறியிருந்தார் இந்த குடிப்பழக்கத்தால் தான் எனக்கு வாய்ப்பு வாய்ப்புகள் இல்லாமல் இருந்ந்தது தற்போது ஒரு வாய்ப்பு கூட இல்லாமல் தவித்து வருவதாகவும் நடிகை ஐஸ்வர்யா அவர்கள் கூறியிருந்தார். நடிகை ஐஸ்வர்யாவிற்கு ஒரு சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது இதிலாவது அவர் ஒரு ரவுண்ட் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.