Rajini : 80, 90 கால கட்டத்தில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பேரையும் புகழையும் சம்பாதித்தவர் இசைஞானி இளையராஜா. அப்போது இவருக்கு இணை யாருமே கிடையாது சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் திடீரென ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்தார்.
அதுவும் தான் எடுக்கும் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் அவரிடம் சென்று உங்களை வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன் என அனுமதி கேட்க உடனே ரஜினியும் கால் ஷீட் தருகிறேன் என கூறிவிட்டார். ரஜினி ரெடியாக இருந்தாலும் இயக்குனர் கிடைக்காமல் தேடிக்கொண்டு இருந்தார் இளையராஜா.
அந்த நேரத்தில் ஒரு இயக்குனர் ஒரு கதையை கூறி படத்திற்கு ராஜாதி ராஜா என பெயரும் வைத்து விட்டார் ஆனால் திடீரென அவரால் அந்த கதையை தொடர முடியாமல் போனதால் இளையராஜா படத்தை தயாரிக்க முடியாது என உட்கார்ந்து விட்டாராம் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காமெடி நடிகர் ஆர் சுந்தர்ராஜன்..
இளையராஜாவை அணுகி அந்தக் கதையை நான் எடுக்கிறேன் என சொல்லி இளையராஜாவிடம் இருந்து சம்மதம் வாங்கினார் பிறகு முழு கதையையும் எழுதி ராஜாதி ராஜா என்ற தலைப்பிலேயே ரஜினியை நடிக்க வைத்துள்ளார். படத்தில் ரஜினியுடன் இணைந்து ராதா, நதியா..
இந்த நேரத்துல அவர்தான் அள்ளி கொடுப்பார்.. பிரபல நடிகரை நினைவு கூறும் சென்னை மக்கள்
ஜனகராஜ், ராதாரவி, ஆனந்தராஜ், விஜயகுமார், பாபு ஆனந்த், வசந்த், பிரதீப் சக்தி, சீனிவாசன் என பலர் நடித்திருந்தனர் படம் வெளிய வந்து அதிக நாட்கள் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தின் மூலம் இளையராஜாவுக்கு அதிக லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.