100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படத்தை தவிர விட்ட ரஜினி.! கதாநாயகனாக நடித்து வெற்றி கண்ட ரகுவரன்.! இது தான் செம மாஸ்.

rajini
rajini

வெள்ளித்திரையில் வில்லனாகவே பல திரைப்படங்களில் நடித்து வந்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர்தான் ரகுவரன் இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி திறமையை புதிதாக உருவாக்கி கொண்டு பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தார் என்று கூட கூறலாம்.

பல முன்னணி நடிகர்களுக்கு எதிரியாக திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களை அதிகமாக கவர்ந்து விட்டார் அந்த காலத்தில் இவர் ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் கமிட்டாகி நடித்து வந்தார் என்றால் அந்த கதாபாத்திரமாகவே நிஜத்திலும் வாழ்ந்து வருவாராம் அப்படிப்பட்ட குணம் இவருக்கு இருக்கிறதாம்.

மேலும் இவர் ரஜினியுடன் இணைந்து பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிக்கு எதிராக நடித்திருப்பார் பாட்ஷா திரைப்படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வில்லன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதால் இவருக்கு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரம் கிடைத்துக் கொண்டே போனதாம்.

அதே போல் இவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால் இவர் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் 100 நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்துள்ளதாம் கடந்த 1987ஆம் ஆண்டு ரகுவரன், சரத் பாபு, பேபி ஷாலினி போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மைக்கேல் ராஜ்.

raghuvaran
raghuvaran

மேலும் இந்த திரைப்படத்தின் கதை முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தான் எழுதப்பட்டது ஆனால் ரஜினிகாந்தால் கால்ஷீட் தர முடியாத நிலையில் ரகுவரன் இந்த திரைப்படத்தில் நடித்து இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது என இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் நடித்தும் 100 நாட்கள் மேல் ஓடி சாதனை படத்து விட்டது இவரும் ஒரு சிறந்த நடிகர் என தற்பொழுது கூறிவருகிறார்கள்.