Rajini : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகியது படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மடோனா செபஸ்டியன் ப்ரியா ஆனந்த், த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
படம் சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 590 கோடிக்கு மேல் வசூலை வெற்றி கண்டது. லியோ படத்தில் நடித்த பல நட்சத்திரங்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது அந்த வகையில் த்ரிஷா கமல் மற்றும் அஜித்துடன் படம் பண்ணுகிறார்.
அஜித் படத்துடன் போட்டி போட்டு ஜெயித்த தங்கர் பச்சான்.! இதுக்கெல்லாம் தனி தில்லு வேணும்பா..
அதே போல மன்சூர் அலிகான் சரக்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதிரியான நேரத்தில் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசியது பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி.. ரஜினி குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தமன்னாவுடன் நடனம் ஆடலாம் என்று ஆசையாக வந்தேன் ஆனால் அவருடன் எனக்கு காம்பினேஷன் இல்லை என கூறினார்கள் என கூறினார் மேலும் பேசிய அவர் ஜெயிலர் விழாவில் ரஜினிகாந்த் தமன்னாவிடம் கிட்டத்தட்ட மன்சூர் அலிகான் பாண்டியில் தான் பேசினார் அது குறித்து ஏன் பெரியதாக யாரும் குரல் எழுப்பவில்லை..
அந்த விழாவில் தமன்னா குறித்து பேசியது ரஜினிகாந்த் இச்சையை வெளிப்படுத்தும் வார்த்தை தானே அது ரஜினியாக இருந்தால் என்ன மன்சூர் அலிகான் ஆக இருந்தால் என்ன ஒரு பெண் குறித்து அதுவும் ஒரு நடிகை குறித்து இந்த மாதிரி கேவலமான எண்ணம் உங்களுக்குள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் பேச்சு தான் அது எனவே இது போன்ற பேச்சுக்கள் எந்த காலத்திலும் யாரும் பேசக்கூடாது என கூறினார்.