தமிழ் திரை உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் அடித்து நொறுக்கியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுக்க நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கன்னட ஹீரோ சிவராஜ்குமார் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது மற்றபடி யார் ஹீரோயின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிட வில்லை.
அதிலும் ரஜினியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி தமிழ் திரையுலகில் இருக்கும் திறமையான பிரபலங்களை பார்த்து எப்பொழுதும் வாழ்த்து சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் அண்மையில் ரஜினியை கவர்ந்திழுத்த திரைப்படம் விக்ரம்.
இந்தப் படத்தில் கமல்,விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றவரின் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது அதே சமயம் படத்தை மிக நேர்த்தியாக லோகேஷ் இயக்கியிருந்தார் படத்தை ரஜினி பார்த்துவிட்டு பட இயக்குனரையும், நடிகர்களையும் வாழ்த்தியுள்ளார். சினிமாவுலகில் போட்டிகள் இருந்தாலும் ரஜினி அதையெல்லாம் மறந்துவிட்டு படங்களை வாழ்த்துவது தற்போது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது அதிலும் தனது நண்பர் கமலின் படத்தை வாழ்த்தியது நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.
விக்ரம் படம் மட்டுமல்ல பல்வேறு புதுமுக நடிகரின் படங்கள் தொடங்கி டாப் நடிகர்கள் படங்கள் வரை ரஜினிக்கு பிடித்து போய் விட்டால் அவர்களுக்கு போனிலோ அல்லது நேரிலோ கூப்பிட்டு வாழ்த்து சொல்வது வழக்கம். ஆனால் ரஜினி செய்யும் இந்த செயலை மற்ற பிரபலங்கள் பின் தொடரவில்லை தமிழ் சினிமா உலகில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் அஜித் போன்றவர்கள் இது போன்ற மற்ற நடிகர்களின் திறமையோ அல்லது படத்தையோ பார்த்து வாழ்த்துகளை பெரிதாக தெரிவிப்பதில்லை.