நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்காது.? இந்த கதை வேணாம் இயக்குனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரஜினி.. விருதுகளை குவித்த படம்

Rajini
Rajini

Rajini : சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் கதை கேட்கும் போது சிறப்பாக இருப்பதால் ஓகே சொல்லி விடுவார்கள் ஆனால் படம் எடுக்கும் போது நாம் நினைத்த வர வில்லை என்றால் நடிக்க விருப்பமில்லை என சொல்லி நடிகர்கள் படத்திலிருந்து விடாப்பிடியாக வெளியேறி விடுவார்கள் ஒரு சிலர் கமிட்டாகி விட்டோம் என நடித்தும் கொடுப்பவர்கள்.

அப்படி ரஜினி  வேண்டா வெறுப்பாக நடித்த படம் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 1979 ஆம் ஆண்டு பஞ்ச அருணாச்சலம் கதை எழுதி, தயரிக்க.. எஸ் பி முத்துராமன் இயக்க ரஜினி நடித்த திரைப்படம் தான் ஆறிலிருந்து அறுபது வரை.. படத்தில் ரஜினியுடன் இணைந்து சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், படாபட் ஜெயலட்சுமி என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

அப்பா, அம்மாவுக்கு உதவி பண்றது ஒரு குத்தமா.. மகாவை நேரம் பார்த்து போட்டுக் கொடுக்கும் சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

படத்தின் கதை என்னவென்றால்.. ரஜினி ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்வார் அவருடைய தம்பி, தங்கைகள் படித்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு வேலை வாங்கி அவர்களுக்கு கல்யாணம் பண்ணி வைத்து எல்லாவற்றையும் செய்து நடுரோட்டிற்கு வந்து விடுவார்.

ஆனால் அவருடைய தங்கை தம்பிகள் எல்லாம் நன்றாக இருப்பார்கள். ரஜினியை கண்டுக்கவே மாட்டார்கள். இதுதான் படத்தின் கதை.. இந்த படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருந்தாராம் திடீரென அவருக்கு நிஜ வாழ்க்கையில் இப்படி எல்லாம் இருக்க மாட்டார்களே என இயக்குனர் முத்துராமலிங்கரத்திடம் சொல்ல..

அர்ஜுன் கை காலை உடைத்து மூளையில் உட்கார வைத்த மேக்னா.! மாப்பிள கரண்ட்னு தெரியாம கைய வச்சுட்டியே..

அவர் படத்தின் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலத்தை படப்பிடிப்பு தளத்திற்கு வர வைத்து உள்ளார் ரஜினியின் சிந்தனையை புரிந்து கொண்ட பஞ்சு அருணாச்சலம் ரஜினி ஒரு 5000 அடி படத்தை எடுத்து போட்டு பார்ப்போம்.. பிடிக்கவில்லை என்றால் இதை அப்படியே விட்டுவிட்டு வேறு கதை எடுப்போம் என சொல்ல ரஜினிக்கு அது சரியான பட்டதாம்..

அதேபோல் எடுத்த காட்சிகளை போட்டு பார்க்க இந்த படம் தனது திரை வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என ரஜினி நம்பினார் அவரை நம்பிக்கை கொஞ்சமும் வீண் போகவில்லை இந்த படத்திற்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது ரஜினிக்கு கிடைத்தது அதேபோல் ரஜினி நடிப்பில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றும் ஆறிலிருந்து அறுபது வரை படம் இருக்கிறது.