தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகனாக வலம் வந்தவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில்அந்த காலத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இல்லாத திரைப்படங்களே இல்லை என்றே கூறலாம்.
அதிலும் குறிப்பாக கவுண்டமணி எந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படத்தில் மக்களுக்கு அருமையான கருத்தை புரியும்படியாக கூறியிருப்பார்.
இவ்வாறு இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே அந்த காலத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கும்.
மேலும் கவுண்டமணி ரஜினியுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அந்த வகையில் ரஜினி மற்றும் கவுண்டமணி ஆகிய இருவர்களும் அந்த காலத்தில் எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது கவுண்டமணி தரையில் உட்கார்ந்ததால் ரஜினியும் கீழே உட்கார்ந்து டீ குடிப்பது போன்ற காட்சி அளிக்கிறது.
இந்த புகைப்படம் தற்போது ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.