Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 71 வயதிலேயும் நிற்காமல் படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம்.. வழக்கமான அப்பா – மகன் கதையாக இருந்தாலும் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு மற்றும் சிவராஜ்குமார், மோகன்லால் அவர்களின் மாஸ் என்ட்ரி, விநாயகத்தின் ரவுடிசம்..
யோகி பாபு காமெடி என ஒவ்வொன்றும் ரசிக்கப்படி இருந்ததால் படம்.. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக பெரிய ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுவும் 20 நிமிடம் தான் அந்த படத்தில் வந்து போவார் என்ற பேச்சுக்களும் வெளியாகி வருகிறது. அடுத்து ரஜினி கைவசம் தலைவர் 170, தலைவர் 171 ஆகிய படங்கள் இருக்கின்றன இதில் முதலாவதாக டிஜே ஞானவேல் உடன் கைகோர்த்து தலைவர் 170 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படம் சமூக அக்கறை கலந்த ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வளர்ந்து வரும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அவர்கள் ரஜினியை சந்தித்து வரலாற்று சம்பந்தப்பட்ட ஒரு கதையை கூறி இருக்கிறாராம்.
Vidaamuyarchi update : அதிரடி ஆக்சன், நோ எமோஷனல் மிரட்டும் இயக்குனர் மகிழ் திருமேனி
அந்த கதை ரஜினிகாந்த் நிராகரிக்க பின் தேசிங்கு பெரியசாமி உடனே நடிகர் சிம்புவை சந்தித்து அந்த வரலாற்று சம்பந்தப்பட்ட கதையை கூறுகிறார் அவருக்கு ரொம்ப பிடித்து போவது ஓகே சொல்லிவிட்டாராம் கமலின் ராஜ் கமல் ஃபிலிம் நிறுவனம் தான் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கிறது எஸ்டிஆர் 48 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.