திருமண நாளை முன்னிட்டு ரோபோ சங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி – பதிலுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா.?

ROPO-SHANGAR

அண்மைகாலமாக சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டு இருக்கின்றனர் அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயனை போன்று சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவர் ரோபோ சங்கர்.

இவர் வெள்ளி திரையில் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் தனது காமெடியை வெளிப்படுத்தி தற்போது தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். முதலில் ரோபோ சங்கர் ஜீவா நடிப்பில் வெளியான ரௌத்திரம் திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாயா பாலகுமாரா படத்தில் இவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

அதன் பிறகு மாரி, மாரி 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், இரவின் நிழல் கோப்ரா போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி கண்டார். மேலும் பல புதிய பட வாய்ப்புகளையும் கைப்பற்றியே சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார்  அவ்வபோது  சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும்  சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

ROOPO SHANGAR 2
ROOPO SHANGAR 2

இவரை தொடர்ந்து இவரது மகள் இந்திரஜாவும் படங்களில் நடித்து வருகிறார் இவர் இதுவரை  பிகில், விருமன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி தனது குடும்பத்துடன் சூப்பராக வாழ்ந்து வரும் ரோபோ சங்கருக்கு 22 வது திருமண நாளை ஓட்டி ரோபோ சங்கர் ரஜினியை சந்திக்க வேண்டும் என ஆசையாக கேட்டுக் கொண்டார் இதனை அறிந்து கொண்ட ரஜினி அதற்கு என்ன வாங்க மீட் பண்ணலாம் என கூறி உள்ளார் உடனே ஜெயிலர் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது குடும்பத்துடன் ரோபோ சங்கர் சென்று ரஜினியை சந்தித்துள்ளார்.

ROOPO SHANGAR 1

அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளி வந்து வைரலாகி வருகின்றன. திருமணநாள் அதுவுமாய்  ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அப்பொழுது ரோபோ சங்கர், இது போதும் தலைவா நன்றி என கூறி அங்கிருந்து விடை பெற்றாராம். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

ROOPO SHANGAR