விஜயின் கோட்டையில் பறக்கும் ரஜினி கொடி.. வசூல் வேட்டையாடும் ஜெயிலர்

vijay
vijay

Jailer : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம். ஷூட்டிங் ஆரம்பிக்கும் போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் அடுத்ததாக வெளிவந்த அப்டேட்டுகளும் இன்னும் அதிகரிக்க வைத்தது ஒரு வழியாக ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி..

கோலாகலமாக 4000 திறக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் கலந்து அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் பொது மக்கள் மத்தியிலும் ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்றது ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதன் காரணமாக அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டையையும் நடத்த ஆரம்பித்தது முதல் நாளே 90 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த நாட்களும் சனி, ஞாயிறு என்பதால் இந்த படத்தின் வசூல் எகிறியது இதுவரை மட்டுமே உலகளவில் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இப்பதாக கூறப்படுகிறது.

இப்பவே ஜெயிலர் படம் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களின் வசூல் சாதனையை முறையடித்து வருகிறது இந்த நிலையில் விஜயின் கோட்டை என கருதப்படும் கேரளாவில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இதுவரை மட்டுமே அங்கு 23.8 கோடி வசூல் செய்துள்ளது இதன் மூலம் விஜயின் அனைத்து பட வசூல் சாதனையும் முறியடித்து உள்ளது .

கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் கேரளாவில் 40 கோடி வசூலை இன்னும் ஜெயிலர் படம் முறியடிக்க வில்லை ஆனால் வருகின்ற நாட்களில் அந்த சாதனையும் கண்டிப்பாக ஜெயிலர் முறியடிக்கும் என கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்றும் சூப்பர் ஸ்டார் தான் என கூறி கொண்டாடி வருகின்றனர்.