சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பெரும்பாலான நடிகைகள் பலரும் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்களாக தான் இருக்கின்றனர். தமிழ் சினிமாவிலும் பெரிதும் மாடலிங் துறையில் இருப்பவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் மாளவிகா மோகனன்.
மலையாளத்தில் பிறந்து தெலுங்கில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் முதலில் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து இருந்தார் ஆனால் இதில் அவருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் ரஜினி படம் என்பதால் இதில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் ஓரளவு ரசிகர் மத்தியில் கவனிக்கப்பட்டார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் உடன் கை கோர்த்தது மாஸ்டர் திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் அவருக்கு ஓரளவு நல்ல பெயரை பெற்று தந்தது. மாளவிகா மோகனன் எடுத்தவுடனேயே ரஜினி, விஜய் ஆகியோர் உடன் கைக்கோர்த்தன் காரணமாக டாப் நடிகரின் பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இப்ப கூட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “மாறன்” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் மாளவிகா மோகனுக்கு படப்பிடிப்பின் போது சிறு விபத்து ஏற்பட்டு உள்ளது அதை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உளளார். இதை கண்ட ரசிகர்கள் வருத்தம் அடைந்து உள்ளனர் மேலும் ஆறுதலுக்காக சில நல்ல வார்த்தைகளை கூறி அவருக்கு உறுதுணையாக இருக்கின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.