தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினியை. இவர் 80 மற்றும் 90களில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடாதக்கது இத்தனை தொடர்ந்து இன்னமும் இவர் திரைப்படங்களை நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார் நடிகர் ரஜினி.
மேலும் ரஜினி அவர்களின் 170வது திரைப்படம் குறித்து அப்டேட்டும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது அந்த வகையில் தலைவர் 170 வது திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்க இருப்பதாக பட குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினியின் காதல் கதை குறித்த சில தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லதாவை எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதாவது லதா அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வந்திருக்கிறார். அப்போது லதாவை பார்த்தவுடனே நடிகர் ரஜினிக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இவர்கள் இருவரும் இரு வீட்டார் சமூகத்துடன் 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் ஒரு பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருந்தார் அந்த வகையில் இந்த வயதிலும் உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க என்ன காரணம் என்று கேட்கப்பட்டதற்கு என்னுடைய மனைவிதான் என்று கூறியிருந்தார்.
கண்டக்டராக இருக்கும் போது மது மற்றும் சிகரட்டிற்கு அடிமையாகி இருந்தேன் சினிமாவில் வந்து லதாவை திருமணம் செய்து கொண்ட பிறகு அனைத்தையும் மாற்றி விட்டேன் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு அழகான காதல் கதையை போல மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகருக்கும் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.