Jailer Movie: சென்னையில் வெற்றி திரையரங்கில் ரஜினியின் ஜெய்லர் படத்தினை பார்க்க வந்த விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அப்படி ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினி காக்கா, கழுகு ஆகியவற்றை வைத்து கதை ஒன்றை கூறியிருந்தார். அதில் காக்கா என குறிப்பிட்டது நடிகர் விஜய்யை தான் என சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வைரலானது. மேலும் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இவர் இந்த சர்ச்சைகளுக்கு இடையே இன்று ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்சை ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
அந்த வகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்குகளிலும் 9:00 மணிக்கு ஷோ ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஜெயிலர் படத்தினை பார்ப்பதற்காக சில விஜய் ரசிகர்கள் வந்தார் வந்திருந்தனர். அப்போது தியேட்டரில் அவர்கள் ரஜினி ஒழிக என சத்தம் போட்டதால் இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அந்த விஜய் ரசிகர்களை பிடித்து அடி வெளுத்து எடுத்துள்ளார்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய்யின் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் துரத்தி பிடித்து தியேட்டரின் வாசலில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்கள். இவ்வாறு விஜய், ரஜினி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Pavatha Polanthutanuka 😂pic.twitter.com/rJfzWuVzu1
— Karthik 💜🎀 (@_Karthik_Tweets) August 10, 2023