அஜித், கமலுக்கு இருக்கிற அந்த மனசு.. ரஜினி கிட்ட இல்ல.? இவ்வளவு கஞ்சத்தனமாக கூடாது

Rajini
Rajini

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.  அப்படி இவர் கடைசியாக இளம் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்சை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி 25 நாட்களை தாண்டிய பிறகும் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக போய்க்கொண்டிருக்கிறது இதனால் ஜெயிலர் படத்தின் வசூலும் உச்சத்தை தொட்டுள்ளது 200 கோடி பட்ஜெட்டில் உருவான ஜெயிலர் திரைப்படம் இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது நிச்சயம் 700 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைக்கும் என தெரிய வருகிறது.

இந்த வெற்றியை தயாரிப்பாளர் கொண்டாடினாலும் ரஜினி தன்னுடைய இயக்குனருக்கும் தன் சார்பாக எதையுமே அவர் கொடுக்கவில்லை இந்த விஷயத்தில் ரஜினியை விட கமல், அஜித் எவ்வளவோ பரவாயில்லை என கூறப்படுகிறது. அஜித் தன்னுடைய இயக்குனர் சரவணன் மற்றும் எஸ். ஜே சூர்யாவுக்கு கார் கொடுத்து அழகு பார்த்தார்.

நமக்கு தெரிந்த இரண்டு பேரு அஜித் தெரியாமலேயே பல இயக்குனர்களுக்கு இதுபோல பைக், கார் கொடுத்திருப்பார் என கூறப்படுகிறது இவரை போலவே கமலஹாசனும் தான் தயாரித்து, நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இயக்குனருக்கு லோகேஷுக்கு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக கொடுத்து அழகு பார்த்தார்.

இப்படி அஜித், கமல் ஆகியவர்கள் இருக்கின்ற நிலையில் ரஜினி உச்ச நட்சத்திரமாக இருந்தும் தன்னுடைய இயக்குனருக்கு எந்த பரிசையும் அவர் கொடுக்காமல் இருப்பது பலருக்கும் வேதனை கொடுக்கிறது மேலும் இவ்வளவு கஞ்சத்தனமாக கூடாது எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.