சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 திரைப் படத்தில் நடிப்பதற்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே பல சிறந்த இயக்குநர்களும் கதையை கொண்டிருந்தாலும் இளம் இயக்குனர் நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது.
அதனால் பிரம்மாண்ட முறையில் இந்த படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ரஜினி கைகோர்த்துள்ளார் இந்தப் படத்தின் ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட உள்ளது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறது படக்குழு.
அந்த வகையில் ரஜினியுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை ரம்யாகிருஷ்ணன் இப்படி இருக்கின்ற நிலையில் இவர்களையும் தாண்டி ரஜினிக்கு வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிது. அந்த நடிகர் வேறு யாருமில்லை கன்னட நடிகர் சிவ ராஜ்குமார். இவர் நடிகராக இருப்பதையும் தாண்டி படங்களை தயாரிப்பது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் வருடத்திற்கு மூன்று படங்களாவது கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் கனடாவில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவ ராஜ் குமார்.
இதுவரை 140 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துயுள்ளார். தலைவரின் 169 வது திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது வேற லெவல் இருக்கிறது. அண்மை காலமாக தமிழ் சினிமாவுலகில் டாப் நடிகர்கள் படங்களில் பிற மொழி நடிகர்கள் வில்லனாக நடித்த அசத்துகின்றனர். அதுபோல தலைவர் 169 படத்தில் கன்னட நடிகர் வில்லனாக நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.