நண்பனுக்காக சம்பளத்தை குறைக்கும் கொள்ளும் ரஜினி.! சூப்பர் ஸ்டாரின் நல்ல குணத்தை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்.

rajini
rajini

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகிறார். இப்பொழுது கூட நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஹைதராபாத்தில் இந்த படத்திற்கான செட் பிரம்மாண்டமாக போடப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் பல நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரமாண்டமான ஒரு வெற்றி படமாக கொடுத்துவிட்டு ரஜினி அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு இருக்கிறார் அவர்களுடன் அடுத்தடுத்து இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

ரஜினி பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கீழ் பணியாற்றி உள்ளார் ஆனால் ஒரு சில நிறுவனங்களின் கீழ் அவர் பணியாற்றியது கிடையாது இதுவரை பஞ்சு அருணாச்சலம், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணியாற்றியது கிடையாது. இதனால் ரஜினி ஒரு முடிவு எடுத்துள்ளார் அதாவது தலைவர் 170-வது திரைப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தான் தயாரிக்க போகிறது என சொல்லப்படுகிறது

மேலும் அவரும், ரஜினியும் நீண்ட கால நண்பர்கள் என சொல்லப்படுகிறது தனது நண்பருக்காக அடுத்த படத்தில் ரஜினி எனது சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க இருப்பதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது.