சிவகார்த்திகேயனை துரத்தி விட்ட ரஜினி..! “ஜெயிலர்” படத்தில் வாய்ப்பு பறிபோக இதுதான் காரணம் – பிரபல பத்திரிகையாளர் பேச்சு..

rajini
rajini

சினிமா உலகில் அண்மைக்காலமாக ஒரு டாப் ஹீரோ படத்தில் இன்னொரு டாப் ஹீரோ நடிப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பதோடு  மட்டுமல்லாமல் படம் வெளிவந்து நல்ல வசூல் வேட்டை நடத்துகின்றன ஆனால் ஒரு சில ஹீரோக்கள் அதை விரும்புவதில்லை அந்த வகையில் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதை விரும்புவதில்லை.

அவரது படத்தில் அவர் நடித்தாலே அந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று விடும். தன்னுடைய படத்தில்  ஏன் இன்னொரு நடிகரை நடிக்க வைத்தால் அது தன்னுடைய படமாக இருக்காது என்பதையும் ரஜினியை நன்கு உணர்ந்து கொண்டதால் எப்பொழுதுமே தனது படங்களில் சோலோவாக நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 169 வது திரைப்படம் ஆன ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து விநாயகன், யோகி பாபு, கன்னட டாப் ஹீரோ சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன்.

மற்றும் வசந்த் ரவி  போன்ற பல முன்னணி நடிகர்,நடிகைகள் நடித்து வருக்கிறனர் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனை..

ஒரு காட்சியிலாவது நடிக்க வைத்து விடலாம் என நெல்சன் முடிவு செய்திருந்தார் ஆனால் ரஜினியோ ரொம்ப பிடிவாதமாக ஜெயிலர் படம் என்னுடைய திரைப்படமாகவே இருக்கட்டும் என ஒரே கோடாக போட்டாராம் இதனை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.