Blue Sattai Maran: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்து ரஜினியை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து வருகிறார். எனவே இதன் காரணமாக ப்ளூ சட்டை மாறனை ரஜினி தனியாக அழைத்து மீட்டிங் நடத்தியதாக கூறப்படும் நிலையில் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சவால் ஒன்றை விட்டுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி அன்று உலக அளவில் ஏராளமான திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அப்படி வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ஜெயிலர் 800 கோடியை வசூல் செய்துவிடும் என்று ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து பல தகவல்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர் எனவே இதனை எல்லாம் பார்த்து கடுப்பான ப்ளூ சட்டை மாறன் வசூல் பற்றி அதிகமாக ட்ரோல் செய்து வருகிறார்.
இதனை பார்த்த ரஜினி ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம் எனவே தனது நண்பரும் சினிமா செய்தி வாசிப்பாளாருமான செய்யாறு பாலு மூலம் ப்ளூ சட்டை மாறனை தனியாக அழைத்து சந்தித்து பேசிய உள்ளார். இது குறித்து ப்ளூ சட்டை மாறனிடம் கூற முதலில் அவர் முடியாது என மறுத்துள்ளார் பின்னர் சீனியர் நடிகர் ரஜினி அழைத்து போகாமல் இருக்க முடியாது என ப்ளூ சட்டை மாறன் ஓகே என்று கூறினாராம்.
11 மணிக்குள்ள சுத்துபோட்டு மெரட்டிருவாங்க or சமாதானமா போய்டுவாங்க
இந்த வீடியோ ரிலீஸாகலாம் வாய்ப்பே இல்ல
— நெட்வொர்க் நாடோடி (@gypsy_online) August 17, 2023
ப்ளூ சட்டை மாறனின் கோரிக்கைக்கு முதலில் மறுத்துவிட்ட ரஜினி பின்னர் சில கண்டிஷன்கள் போட சம்மதம் தெரிவித்தாராம் ஆனால் இந்த வீடியோவை வெளியே விடக்கூடாது என ப்ளூ சட்டை மாறனம் எழுதி வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மீட்டிங்கில் சில கசப்பான அனுபவங்கள் கிடைத்ததால் தற்போது இந்த வீடியோவை 11 மணிக்கு வெளியிடுவேன் என ப்ளூ சட்டை மாறன் ட்விட் செய்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் வடிவேலுவின் காமெடி வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து நெட்டிசன்களை கடுப்பாகி உள்ளார்.