சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏற்றது போல் மிக விலைஉயர்ந்த பிரமாண்ட காரை ஓட்டிய ரஜினி.! வைரலாகும் புகைப்படம்

rajini

தமிழ் சினிமா உலகில் எம்ஜிஆர் சிவாஜிக்கு அடுத்தபடியாக நீண்ட காலமாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இவரது இடத்தை பிடிக்க பலரும் போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூல் சாதனை பெறுவது வழக்கம் ஆனால் இருப்பினும் இவர் கடைசியாக நடித்த தர்பார் படம் சொல்லிகொள்ளும் வசூல் பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது.

இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா என மிகப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர் இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது இப்படத்தின் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது இதனைத்தொடர்ந்து படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரஜினி அவர்கள் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரான லம்போர்கினி கார் ஓட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

rajini
rajini