Jailer act Vinayakan : தமிழ் சினிமாவில் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய திரைப்படங்கள் விரல் விட்டு என்னும் அளவு தான் அதில் ஒன்றாக இணைந்துள்ளது ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இன்றும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் உச்சத்தை இயற்றியுள்ளது.
ஆம் இதுவரை மட்டுமே சுமார் 605 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த வருடத்தின் வசூல் குறையப்போவதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும் தற்பொழுது வெளியே வர முடியாத அளவிற்கு இருக்கின்றனர்.
அந்த அளவிற்கு புகழின் உச்சிக்கு சென்றுள்ளதோடு மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம் இந்த சூழலில் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் முதல் முறையாக வெளி உலகத்திற்கு தலைகாட்டி உள்ளார் ஆம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவர் பேசிய வீடியோவை தற்போது தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. ஜெயிலர் படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைக்க காரணம் என் மேனேஜர் தான் இப்படி ஒரு வாய்ப்பு வந்ததைப் பற்றி என்னிடம் கூறினார் ரஜினி சார் படம் அதுவும் சன் பிக்சர்ஸ் என்றால் சொல்லவா வேண்டும் உடனே நான் ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு நெல்சன் எனக்கு வர்மன் கேரக்டரை விளக்கினார்.
இப்படித்தான் எனக்கு ஜெயிலர் வாய்ப்பு கிடைத்தது அதிலும் ரஜினியுடன் நடித்தது நான் செய்த பாக்கியம் இதை நான் சொப்பனத்தில் கூட யோசிக்கல சாரே என்று அவர் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருந்தார்.
அது மட்டுமல்லாமல் வர்மன் கதாபாத்திரம் தனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்து விட்டதாகவும் வீட்டை விட்டுவிட்டு வெளியில் செல்ல முடியாத அளவுக்கு பிரபலமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரஜினியால் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வீட்டை விட்டு கூட வெளியே வர முடியலையா எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.