தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் சினிமாவை நன்கு புரிந்து வைத்து அதற்கு ஏற்றார்போல ஓடுவதால் இவரது படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைகின்றன தற்போது கூட ரஜினி தனது 169 வது திரைப்படம் எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி குறித்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது அதாவது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2007ம் ஆண்டு உருவான திரைப்படம் சிவாஜி இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த படத்தின் கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துப் போகவே..
இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் இந்த படத்தில் முதலில் நடிக்க அவர் அட்வான்ஸ் வெறும் ஆயிரம் ரூபாய்தான் வாங்கிக் கொண்டாராம் பின் படம் முடிந்த பிறகு காசை வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி உள்ளார். அவர் அவ்வாறு சொல்ல காரணம் இந்த படத்தின் கதையும் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை ரஜினி உணர்ந்து விட்டார்.
அதனால் தான் சம்பளம் வாங்கினால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல சிக்கல் ஏற்பட்டு ஒருவேளை படத்தின் தரம் குறைந்துவிடும் அல்லது படம் எடுக்க முடியாமல் இழுத்துக்கொண்டே போகும் என்பதால் தனது சம்பளத்தை அப்போது வாங்கவில்லையாம்.
படத்தின் கதைக்காக சம்பளமே வாங்காமல் சிவாஜி படத்தில் நடித்துள்ளார். ரஜினி நினைத்ததுபோலவே படம் புதிய தொழில்நுட்பம் மற்றும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு படம் ரிலீசாகி 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது அதன்பிறகு தயாரிப்பு நிறுவனம் ரஜினிக்கு சம்பளமாக அப்பொழுது 1 கோடி ரூபாய் கொடுத்து அசத்தியதாம். தனது படம் ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ரஜினி ரெடியாக இருப்பார் அதற்கு இது ஒரு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.