சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 71வது பிறந்த நாளை ஒட்டி பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்தார்கள். அதேபோல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் ரஜினிக்கு வாழ்த்து கூறி இன்னும் பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என வாழ்த்து கூறினார்.
மேலும் கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள் அதேபோல் ஹர்பஜன்சிங் அவருடைய வாழ்த்தில் சினிமா பேட்டையில் ஒரு சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து எனக் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூட நாற்பது வருடங்களாக தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் அவர்களை தலைவா என்று கூப்பிட்டு பெருமைப் படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தனது 71 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மோடி முதல் பெரியவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் அரசியல் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் என கூறி ஹெஸ்டேக் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அவர்கள் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஹர்பஜன்சிங் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்கள். மேலும் அவர் குறிப்பிட்டுள்ள பதிவில் மாரு மேல சூப்பர் ஸ்டார் என்றும் எண்பதுகளில் பில்லாவும் நீங்கள்தான் 90களில் பாஷாவும் நீங்கதான் இரண்டாயிரத்தில் அண்ணாத்தவும் நீங்கதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா பேட்டையின் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா உங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என வாழ்த்து கூறியுள்ளார்.
"என் மாருமேல சூப்பர் ஸ்டார்"
80's பில்லாவும் நீங்கள் தான்
90's பாட்ஷாவும் நீங்கள் தான்
2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDSuperstarRajinikanth #SuperstarRajinikanth #ரஜினிகாந்த் pic.twitter.com/Tstolu51RB— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 12, 2021