ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளதுஇதோ பாருங்கள்.!

rajine
rajine

ரஜினி நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த திரைப்படம் தான் தர்பார் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாமல் இருந்த நிலையில் தற்போது ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் இவரோடு இணைந்து குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த திரைப்படம் மறுபடியும் ஆரம்பிக்கிறது என்பதை இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் சிவா பேசிய வீடியோ காணொளியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ காணொளியில் இயக்குனர் சிவா வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது என்பதை தெரிவித்துள்ளார்.

இவர் பேசிய வீடியோ காணொளியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இந்த வீடியோ காணொளி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.

இதனை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.