ஆரம்பத்தில் ரஜினியை ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்து வெளியே போக சொன்ன தயாரிப்பாளர்.! யார் அந்த தயாரிப்பாளர் என்பதை வெளியே கூறிய இயக்குனர்.!

rajini
rajini

அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்  சமீபத்தில் வெளியாகிய ரஜினி திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் என்றே கூற வேண்டும். அந்தளவு ஹிட்டடித்துள்ளது. இந்த நிலையில் ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா சுனில் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் தர்பார்.

பல வருடங்களுக்குப் பிறகு தர்பார் திரைப்படத்தில் தான் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஒருவரால் ரஜினி அசிங்கப்பட்டு உள்ளார் அதனை அந்த மேடையிலேயே அனைவரின் முன்பும் கூறியுள்ளார். அவர் கூறியதாவது சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் தயாரிப்பாளர் ஒருவர் என்னை அவமானப்படுத்தினார்.

அதாவது படத்தில் கமிட் செய்தார்கள் அதற்கு அட்வான்ஸ் கொடுக்காமல் என்னைத் திட்டி துரத்தி வெளியே அனுப்பினார்கள் அந்த ஒரே காரணத்தால்தான் கோடம்பாக்கத்தில் வெளிநாட்டு காரில் கால் மேல் கால் போட்டு போக வேண்டும் என ஆசை ஏற்பட்டது. அதனால் இரண்டரை வருடங்களாக  சம்பாதித்தேன் வெளிநாட்டு இத்தாலி கார் ஒன்றை வாங்கினேன் அந்த காரை ஓட்டுவதற்கு வெளிநாட்டு நபரை வேலைக்கு வைத்தேன்.

எந்த இடத்தில் தான் அவமானம் பட்டாமோ அதே இடத்தில் எனது காரை நிறுத்தி சிகரெட்டை பற்ற வைத்தேன் பலரும் யார் வருகிறார்கள் என ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் ஒருவேளை கவர்னர் தான் வருகிறாரோ என பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அந்த காரில் நான் தான் வந்தேன் என அந்த மேடையில் கூறினார்.

அப்படி தான் நம் வாழ்க்கையில் வெற்றி பெற நேரம் காலம் சூழ்நிலை எல்லாம் மிகவும் முக்கியம் அதற்காக நாம் காத்திருக்க வேண்டும் கடுமையாக உழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ரஜினிகாந்த் இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்களை எந்த தயாரிப்பாளர் அவமானப்படுத்தினார் என்ற கேள்வி சமூகவலைதளத்தில் தீயாய் பரவியது இந்தநிலையில் அந்த தயாரிப்பாளர் யார் என்பதை அந்த திரைப்படத்தின் இயக்குனர் காரைக்குடி நாராயணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.