மீனாவின் கணவர் இறுதிச் சடங்கில் ரஜினியின் செருப்பை போட்டு விட வந்த நபர்.! ஆனால் சூப்பர் ஸ்டாரின் செயலைப் பார்த்து பிரமித்த ரசிகர்கள்.!

rajini
rajini

நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் ரஜினி, விஜய் காந்த் ,விஜய் ,அஜித் என பல முன்னாடி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு திடீரென மரணம் அடைந்தார். அதற்குக் காரணம் மீனாவின் கணவர் பெங்களூரில் வசித்து வந்தார் அங்கு புறாக்கள் அதிகமாக இருந்ததாகவும் அது எச்சத்தில் காற்று பரவி சுவாசிக்க முடியாமல் போனதால் தான் இறந்தார் என கூறப்படுகிறது.

மேலும் மீனாவின் கணவரின் இறுதிச்சடங்கு சமீபத்தில் நடைபெற்றது இவரின் இறுதிச்சடங்கில் சினிமா பிரபலங்கள் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். மேலும் இறுதிச் சடங்கில் ஈமச்சடங்குகளை மீனா மற்றும் மீனாவின் மகள் நைனிகா இருவரும் செய்தார்கள் மீனா கடைசியாக தன்னுடைய கணவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார் அப்பொழுது அங்கிருந்த பலரும் கண்ணீருடன் அவர்களைப் பார்த்தார்கள்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீனாவின் வீட்டிற்கு சென்று வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது ரஜினி செருப்பை போட்டுக் கொண்டிருந்தார் கொஞ்சம் தாமதமானதால் உதவியாளர் ஒருவர் ஓடி வந்து அவரின் செருப்பை அணிய உதவி செய்ய பார்த்தார்.

அதை பார்த்த ரஜினி அவரை தடுத்து நிறுத்தினார் நானே போட்டுக் கொள்கிறேன் என அவரிடம் கூறியுள்ளார் அதன் பிறகு தன்னுடைய இரண்டு செருப்புகளையும் தானே அணிந்து கொண்டு கிளம்பினார் இதை பார்த்த ரசிகர்கள் பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான் என கூறி இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

மேலும் ஒரு ரசிகர் தன்னுடைய சமூக வலைதள பக்கம்மான  ட்விட்டரில் உதவியாளர் தானே செருப்பை அணிவித்தால் என்ன என்று அலட்சியமாக நினைக்காமல் செருப்பை அணிய உதவ வந்தவரை தடுத்து நிறுத்தி அந்த மனசு தான் கடவுள் வாழும் மகான் மனித கடவுள் என கூறியுள்ளார். மேலும் தலைவர் வாழ்க வாழ்க எனவும் கூறியுள்ளார்.