எக்ஸ்ட்ரா ஆம்லெட் கேட்ட ரஜினி.. கலாய்த்துவிட்ட புரடெக்‌ஷன் பாய்.. அவமானத்தில் சூப்பர் ஸ்டார் பார்த்த வேலை

rajini
rajini

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொல்லிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரை உலகில் படிப்படியாக வளர்ந்து தற்பொழுது இந்த இடத்தில் இருக்கிறார் இந்த உயரத்திற்கு வர ரஜினி பல அவமானங்களையும், வேதனைகளையும்  சந்தித்து இருக்கிறார். அதில் ஒன்றைத் தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சினிமாவில் இரண்டு படம் முடித்துவிட்டு மூன்றாவதாக ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ரஜினி பெரிய ஹீரோவும் கிடையாது சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அப்பொழுது புரடெக்‌ஷன் கம்பெனியில் சாப்பாடு போட்டனர். சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஜினி இன்னொரு ஆம்லெட் கிடைக்குமா என புரடெக்‌ஷன் பாயிடம்  கேட்டிருக்கிறார்.

அதற்கு அவரோ கோழி இன்னும் முட்டை போடல என நக்கலாக பேசி உள்ளார் இதில் அவமானப்பட்ட ரஜினி வேகவேகமாக சாப்பிட்டு அங்கிருந்து போய் விட்டாராம். பின் ஐந்து வருடம் கடினமாக உழைத்து ஒரு முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு திரும்பவும் ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு வந்து அங்கு சாப்பிட்ட உட்கார்ந்து உள்ளார்.

அதே பழைய ஆள் ரஜினிக்கு சாப்பாடு பரிமாற வந்தாராம் ரஜினிக்கு எப்படி ஞாபகம் இருக்கிறதோ அதேபோல அவருக்கும் இருந்ததால் ரஜினிக்கு சாப்பாடு போட தயங்கினாராம் கிட்ட வந்த போது ரஜினியே இப்பயாவது   கோழி முட்டை போட்டு விட்டதா என கேட்க அவர் பதட்டத்தில் கண்கலங்க ஆரம்பித்து விட்டாராம்.

ரஜினி  அதெல்லாம் ஒன்றும் இல்லை தம்பி அன்று நீங்கள்  என்னை அப்படி சொல்லும் பொழுது எனக்கும் அவமானமாக இருந்தது வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு ஓடி விட்டேன் ஆனால் அதை ஒரு உத்வேகமாக எடுத்துக்கொண்டு படிப்படியாக வளர்ந்து தற்பொழுது இந்த இடத்தில் இருக்கிறேன் என்ன சொல்ல அந்த நபர் தேம்பி தேம்பி  அழுவ ஆரம்பித்து விட்டாராம்..